search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனிப்படைகள் அமைப்பு"

    பொள்ளாச்சி அருகே கல்லூரி மாணவியை கழுத்து அறுத்து கொலை செய்த வழக்கில் தொடர்புடைய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். #PollachiIssue #StudentMudercase #SpecialForces
    பொள்ளாச்சி:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ராகவநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. பைனான்சியர். இவருடைய மகள் பிரகதி (20). இவர் கோவை ஆவாரம்பாளையம் ரோட்டில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் பி.எஸ்.சி. கணிதம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி இருந்தார். 

    நேற்று முன்தினம் கல்லூரியில் இருந்து வெளியே சென்றவர் மாயமானார். அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. எந்த தகவலும் கிடைக்காததால் மாணவியின் பெற்றோர் கோவை காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். காட்டூர் போலீசார் மாணவி மாயம் என்று வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடிவந்தனர்.
     
    இதற்கிடையே, பொள்ளாச்சி அருகே உள்ள பூசாரிப்பட்டியில் ரோட்டோரத்தில் காணாமல் போன கல்லூரி மாணவி பிரகதி பிணமாக கிடந்தார். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மாணவியை மர்ம ஆசாமிகள் காரில் கடத்திச்சென்று கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    மாணவி பிரகதிக்கு வரும் ஜூன் மாதம் 13-ம் தேதி திருமணம் நடத்த ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வந்தநிலையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து போலீசார் கூறுகையில், கொலையாளிகளை விரைவில் பிடித்துவிடுவோம். அவர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது என்றனர்.

    இந்நிலையில், பொள்ளாச்சி கல்லூரி மாணவி கொலை வழக்கு தொடர்பாக திண்டுக்கல் அருகே ஒட்டன்சத்திரத்தில் சதீஷ் என்ற இளைஞரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #PollachiIssue #StudentMudercase #SpecialForces
    பொள்ளாச்சி அருகே கல்லூரி மாணவி கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டார். அவரை காரில் கடத்தி கொலை செய்த மர்மநபர்களை தனிப்படையினர் தேடிவருகிறார்கள். #PollachiIssue #StudentMudercase #SpecialForces
    பொள்ளாச்சி:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ராகவநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. பைனான்சியர். இவருடைய மகள் பிரகதி (20). இவர் கோவை ஆவாரம்பாளையம் ரோட்டில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் பி.எஸ்.சி. கணிதம் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    கல்லூரி விடுதியில் தங்கி இருந்தார். நேற்று முன்தினம் கல்லூரியில் இருந்து வெளியே சென்றவர் மாயமானார். மாணவியின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. மாணவி தொடர்பான எந்த தகவலும் கிடைக்கவில்லை. 
    இதைத்தொடர்ந்து மாணவியின் பெற்றோர் கோவை காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். காட்டூர் போலீசார் மாணவி மாயம் என்று வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடிவந்தனர்.
     
    இந்நிலையில் பொள்ளாச்சி அருகே உள்ள பூசாரிப்பட்டியில் ரோட்டோரத்தில் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் நேற்று மாலை 4 மணிக்கு அரை நிர்வாண கோலத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து கோமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    இதற்கிடையில் ஓட்டன்சத்திரத்தில் இருந்து அந்த வழியாக காரில் கேரளா மாநிலம் சாலக்குடிக்கு சென்ற கோமதி என்ற பெண் ரோட்டோரத்தில் பொதுமக்கள் கூட்டமாக நிற்பதை பார்த்தார். இதையடுத்து தனது கணவர் கார்மேகத்தை காரை நிறுத்தி சொல்லி விட்டு, இறங்கி சென்று பார்த்தார். அப்போது அவர் இறந்து கிடப்பது தனது சொந்த ஊரான ஓட்டன்சத்திரம் அருகே உள்ள ராகவநாயக்கன்பட்டியை சேர்ந்த வெள்ளைசாமி என்பவருடைய மகள் பிரகதி என்று உறுதி செய்தார். இதை தொடர்ந்து போலீசார் மாணவியின் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர். அவர்களும் பூசாரிபட்டிக்கு விரைந்து வந்தனர். தங்களுடைய மகள் பிரகதிதான் என்பதை அறிந்து கதறிதுடித்தனர். மாணவியை மர்ம ஆசாமிகள் காரில் கடத்திச்சென்று கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    மாணவி பிரகதிக்கு வரும் ஜூன் மாதம் 13-ந்தேதி திருமணம் நடத்த ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வந்தநிலையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், இந்த கொலையில் ஈடுபட்ட கொலையாளிகள் தொடர்பான முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளது. எனவே கொலையாளிகளை விரைவில் பிடித்துவிடுவோம். அவர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது என தெரிவித்தனர்.

    பொள்ளாச்சியில் ஆபாச வீடியோ எடுத்து பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கல்லூரி மாணவி கடத்திச்செல்லப்பட்டு பொள்ளாச்சி பகுதியில் கொலை செய்யப்பட்டது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #PollachiIssue #StudentMudercase #SpecialForces
    நெல்லை அருகே தலை துண்டித்து வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரை கொன்றது யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நெல்லை:

    நெல்லை பாளையங் கோட்டையை அடுத்த சீவலப்பேரி அருகே உள்ளது மேலபாலாமடை. இந்த ஊரின் மையப்பகுதியில் ஒரு கலையரங்கம் உள்ளது. அந்த கலையரங்கின் மேடையில் இன்று காலையில் ஒரு வாலிபரின் துண்டிக்கப்பட்ட தலை மட்டும் இருந்தது. அதை சுற்றி ரத்தம் சிதறி கிடந்தது. இதை அந்த வழியே சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். வாலிபரின் தலைமட்டும் கலைரயங்கில் கிடந்த தகவல் அறிந்ததும் அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.

    இதுபற்றி சீவலப்பேரி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு தாழையூத்து துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னரசு மற்றும் சீவலப்பேரி போலீசார் விரைந்து வந்து சம்பவஇடத்தை பார்வையிட்டனர். கொலை செய்யப்பட்ட நபர் யார்? அவரது உடல் எங்கே கிடக்கிறது? என்று விசாரணை நடத்தினர்.

    ஆனால் அவர் யார்? என்பது உடனடியாக தெரியவில்லை. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் பாளை வீரமாணிக்கபுரம் தொம்மை மிக்கேல்புரத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மகன் பால்துரை (வயது 23) என்பது தெரியவந்தது.

    அவரை கொன்றது யார்? எதற்காக கொலை செய்தார்கள்? பால்துரையின் பின்னணி என்ன? என்று போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில் பால்துரை மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றி பல்வேறு தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தன.

    பால்துரையின் தந்தை மற்றும் தாய் சுசீலாவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மாரிமுத்து வீரமாணிக்கபுரத்திலும், அவரது மனைவி சுசீலா தனது சொந்த ஊரான மேல பாலாமடையை அடுத்த ராஜவல்லிபுரத்திலும் வசித்து வந்தனர். பால்துரை தனது தாயாரை பார்க்க அவ்வப்போது ராஜவல்லி புரத்திற்கு சென்று வருவாராம். இந்த நிலையில் தாய் சுசீலாவின் உறவினர் ஒருவருக்கு நெல்லை அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்தது.

    அந்த குழந்தையை பார்ப்பதற்காக நேற்று தாய் சுசீலாவுடன் பால்துரை சென்றிருந்தார். அதன் பிறகு இருவரும் பஸ்சில் ராஜவல்லி புரத்துக்கு சென்றனர். பஸ் நிறுத்தம் வந்ததும் சுசீலா மட்டும் பஸ்சில் இருந்து இறங்கினார். பால்துரையை காணவில்லை. வழக்கம் போல் அவர் வேறு எங்காவது சென்றிருப்பார் என நினைத்த சுசீலா தனது வீட்டுக்கு சென்று விட்டார்.

    இரவு ஆகியும் பால்துரை வீட்டுக்கு வரவில்லை. இதையடுத்து சுசீலா தனது உறவினர்கள் மூலமாக பால்துரையை தேடினார். எனினும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் பால்துரை படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். நள்ளிரவில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    பால்துரை கொலை செய்யப்பட்டதற்கு காரணம் என்ன? கொலையாளிகள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரது உடல் மற்றும் கொலையாளிகளை கண்டுபிடிப்பதற்காக சம்பவ இடத்துக்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. மேலும் தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர்.

    மோப்பநாய் சம்பவ இடத்தில் இருந்து மோப்பம் பிடித்துவிட்டு, அந்த பகுதியில் உள்ள குளத்தை நோக்கி ஓடி நின்றது. அந்த இடத்தில் போலீசார் சோதனை செய்தபோது ரத்தக்கறையுடன் ஒரு சாக்குப்பை கிடந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆனால் பல இடங்களில் தேடியும் பால்துரையின் உடல் கிடைக்கவில்லை.

    ஆகவே கொலையாளிகள் பால்துரையை வேறு இடத்தில் வைத்து கொன்றுவிட்டு, தலையை மட்டும் சம்பவ இடத்தில் வைத்துவிட்டு, உடலை வேறு எங்காவது கொண்டு சென்று வீசியிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

    அதன்பேரில் பால்துரையின் உடலை பல இடங்களில் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் மேலபாலாமடை மற்றும் வீரமாணிக்கபுரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார், பால்துரை தலை மீட்கப்பட்ட இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணையை தீவிரப்படுத்தினார்.

    பால்துரை கொலைக்கு காரணம் என்ன? அவருக்கு அந்த பகுதியில் வேறு யாருடனும் பகை உள்ளதா? கொலைக்கு பெண் தகராறு காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொலை பற்றி துப்பு துலக்கவும், கொலையாளிகளை பிடிக்கவும் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீ சார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×